காரிமங்கலம், செப்டம்பர் 26 | புரட்டாசி 10 :
தருமபுரி மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பான ஆலோசனை கூட்டம் காரிமங்கலம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சந்திரசேகர் வரவேற்புரை வழங்கினார். கூட்டத்தில் தொகுதி பார்வையாளர் அரியப்பன், மாவட்ட பொருளாளர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் கோபால், அன்பழகன், பஞ்சப்பள்ளி அன்பழகன், முனியப்பன், ஆனந்தன், கண்ணபெருமாள் முன்னிலை வகித்தனர்.
மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தலைமையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக பேசப்பட்டு உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர்கள் சேர்மன் முரளி, சீனிவாசன், அரசு வழக்கறிஞர் முருகன், இளைஞர் அணி மகேஷ் குமார், விவசாய அணி குமார், நிர்வாகிகள் தங்கதுரை, செந்தில்குமார், குட்டி, தமிழரசன், கிருஷ்ணன், சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.