தருமபுரி, செப்டம்பர் 25 | புரட்டாசி 09 :
தருமபுரி மாவட்டம், ஏரியூரில் உலக மருந்தாளுநர்கள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அனைத்து பதிவு பெற்ற மருந்தாளுநர்கள் நலச்சங்கம் மற்றும் ஏரியூர் தமிழ்ச் சங்கம் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தது. நிகழ்வில் பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி மருந்துகள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்வு ஏரியூர் காவல் ஆய்வாளர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் D. கார்த்திக், மாநிலச் செயலாளர் திரு. ப. கிருஷ்ணகுமார், மாநில பொருளாளர் கா. ராஜகணபதி, சேலம் மண்டல பொறுப்பாளர் C. சம்பத், ஈரோடு மண்டல பொறுப்பாளர் அ. பிரசாந் கண்ணன், மற்றும் மாநில துணைச் செயலாளர் த. சந்தோஷ்குமார் தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.