தருமபுரி, 25.09.2025 | புரட்டாசி 09
தருமபுரி மேற்கு மாவட்ட மொளையானூரில் உள்ள மாவட்ட செயலாளர் இல்ல அலுவலகத்தில், கோவையில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள திமுகவின் இளைஞரணி மண்டல மாநாடு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் செங்கல்பட்டு அப்துல் மாலிக் அவர்கள், தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன் அவர்களுடன் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வில் மாநில வர்த்தகர் அணி துணைச் செயலாளர் சத்தியமூர்த்தி, மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆர். சிவகுரு, திருவள்ளூர் கிழக்கு இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ் (பாப்பிரெட்டிப்பட்டி பொறுப்பாளர்), திருவள்ளூர் மேற்கு இளைஞரணி அமைப்பாளர் கிரண் (பாலக்கோடு பொறுப்பாளர்), காஞ்சிபுரம் தெற்கு இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ் (அரூர் பொறுப்பாளர்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், மேற்கு மாவட்ட துணை இளைஞரணி அமைப்பாளர்கள் தங்கசெழியன், தி. கோடீஸ்வரன், PMC மகேஷ்குமார், A. நாசர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் JCPK. மோகன், நரேஷ்குமார், மேகராஜ் ஆகியோரும் உடன் இருந்தனர். கூட்டத்தில், கிளை மற்றும் பாக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் தருமபுரி மேற்கு மாவட்டத்தின் அனைத்து இளைஞரணி நிர்வாகிகளும் இன்னும் இரண்டு நாட்களுக்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.