பாப்பிரெட்டிப்பட்டி, செப்டம்பர் 23 | புரட்டாசி 06:
7வது தகடூர் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, தருமபுரி மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலரின் ஆணைக்கிணங்க, பாப்பிரெட்டிப்பட்டி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் “தருமபுரி வாசிக்கிறது” நிகழ்வு இன்று நடைபெற்றது.
நிகழ்வில் பள்ளி மாணவர்களுக்கு நூல் வாசிப்பில் ஆர்வம் வளர்க்கும் நோக்கில் தலைமை ஆசிரியர் திரு. கலைவாணன் தலைமையேற்றும் வகையில் நிகழ்ச்சி நடந்தது. உதவி தலைமை ஆசிரியர் திரு. ரகு வரவேற்பு உரையாற்றினார். கணினி ஆசிரியர் பார்த்தீபன், ராஜாமணி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஜெகஜீவன்ராம் நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.
மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் வகையில் புத்தகங்களை வழங்கப்பட்டு, மாணவர்கள் குழுவாக கதைகள் படித்தல், கவிதை வாசிப்பு மற்றும் படைப்பாற்றல் செயல்முறை போன்ற போட்டிகளில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பள்ளி அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு புத்தக வாசிப்பின் முக்கியத்துவம், படிப்பு ஆர்வம் மற்றும் அறிவாற்றல் வளர்ச்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், நிகழ்வை மாணவர்களுக்கான புத்தக கண்காட்சியுடன் இணைத்து நடத்தி, விருப்ப புத்தகங்களை நேரடியாக பார்வையிட்டு தேர்வு செய்யும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. இதுபோன்ற நிகழ்வுகள் மாணவர்களின் படிப்பு பழக்கத்தை மேம்படுத்துவதோடு, நற்பண்புகள் மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் முக்கிய தளம் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.