காரிமங்கலம், ஆக. 22 | ஆவணி 6 -
காரிமங்கலம் பேரூராட்சியில் உள்ள ஸ்ரீ சாந்தி திருமால் மஹாலில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இம்முகாமில் பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்றுக்கொண்டார். மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக அரசுத் துறைகளின் பல்வேறு சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்பட்டன.
இந்த முகாமில், மின்இணைப்பு பெயர் மாற்ற ஆணைகள், பட்டா மாற்ற சான்றிதழ்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அடையாள அட்டைகள், முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு அட்டைகள் ஆகியவை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. அரசு துறை அலுவலர்கள் தனித்தனி கவுன்டர்களில் அமர்ந்து மக்களின் மனுக்களை பதிவு செய்தனர். மக்கள் நலனுக்கான சேவைகள் வீட்டின் வாசலிலேயே கிடைத்ததாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.