Type Here to Get Search Results !

அனுமந்தபுரம் VPRC கட்டிடத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.


காரிமங்கலம், ஆக. 22 | ஆவணி 6 -


காரிமங்கலம் ஒன்றியத்தின் அனுமந்தபுரம் VPRC கட்டிடத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் முகாமில் பங்கேற்று, மக்களிடமிருந்து மனுக்கள் பெற்றுக்கொண்டார். மக்களின் குறைகளை உடனடியாகத் தீர்க்கும் வகையில் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


இந்த முகாமில், பட்டா மாற்ற ஆவணங்கள், பிறப்பு சான்றிதழ்கள், வேலை அடையாள அட்டைகள், மின்இணைப்பு பெயர் மாற்ற ஆணைகள் உள்ளிட்ட பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மருத்துவ முகாமும் நடைபெற்றது. மொத்தம் 100-க்கும் மேற்பட்டோர் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற்றனர். பொதுமக்களின் பங்குபற்றுதலால் முகாம் சிறப்பாக நிறைவு பெற்றது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies