மொரப்பூர், ஆக 22 | ஆவணி 6 -
மொரப்பூர் ஒன்றியத்தின் செங்குட்டை சமூதாயக்கூடத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பங்கேற்று, மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். துறை அலுவலர்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இந்த முகாமில், முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு அட்டைகள், பட்டா மாற்ற ஆணைகள், பிறப்பு சான்றிதழ்கள், வேலை அடையாள அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு வழங்கப்பட்டன. அரசு துறைகள் சார்ந்த 40-க்கும் மேற்பட்ட சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்பட்டதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும், மனுக்கள் அதிகபட்சம் 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என ஆட்சித்தலைவர் அறிவித்தார்.