Type Here to Get Search Results !

காரிமங்கலம் திமுக மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.


பாலக்கோடு, ஆக. 20 | ஆவணி 3 –


தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் உள்ள திமுக மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது. சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அரியப்பன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் சத்யமூர்த்தி, ஆதிதிராவிடர் நலக்குழு மாநில துணை அமைப்பாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


முன்னாள் அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன் கலந்து கொண்டு உரையாற்றினார். தமிழக அரசு செயல்படுத்தி வரும் ‘உங்களுடன் ஸ்டாலின்’, ‘தாயுமானவர்’, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ போன்ற திட்டங்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளன எனவும், ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் 40 சதவீத உறுப்பினர் சேர்க்கையை அடைந்துள்ள நிலையில் தலைமை கழகத்திற்குத் தனது நன்றியை தெரிவித்தார்.


வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கழக ஆக்கப் பணிகள், வளர்ச்சி நடவடிக்கைகள், தேர்தல் தொடர்பான ஆயத்தங்கள் குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் பேரூராட்சி தலைவர்கள் பி.கே. முரளி, வெங்கடேசன், நகர செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் முனியப்பன், பஞ்சப்பள்ளி அன்பழகன், அடிலம் அன்பழகன், கண்ண பெருமாள், வக்கில் கோபால், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அணி அமைப்பாளர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies