பாலக்கோடு, ஜூலை 2:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே 90 அடி ஆழமுள்ள விவசாயக் கிணற்றில் சிக்கிக் கொண்ட லாரி டிரைவரையும், அவரால் காப்பாற்ற முயன்ற நாயையும் தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள உழவன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த முனியப்பன், லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் நாய் ஒன்று தவறி விழுந்தது. நாயை உயிருடன் மீட்கும் நோக்கில், சுமார் 90 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் முனியப்பன் இறங்கினார். நாயை அடைந்த பிறகு, ஆழமான கிணற்றில் இருந்து மீண்டும் மேலே ஏற முடியாமல் முனியப்பன் சிக்கிக் கொண்டார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சிறப்பு மீட்பு உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு வலையைப் பயன்படுத்தி, முனியப்பனையும் நாயையும் பத்திரமாக உயிருடன் மீட்டனர். துணிச்சலான மீட்புப் பணியால் இருவரும் பாதுகாப்பாக வெளியே கொண்டு வரப்பட்டதால், அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பாலக்கோடு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
.gif)

.jpg)