Type Here to Get Search Results !

பாடி கிராமத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.


பாலக்கோடு, ஆக. 19 | ஆவணி 3 –


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாடி கிராமத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. பாலக்கோடு திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் தலைமையில் நிகழ்ச்சி தொடங்கியது. இம்முகாமில் தாசில்தார் அசோக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேணுகா, கணேஷ்குமார், ஒன்றிய துணை செயலாளர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி முகாமினை தொடங்கி வைத்தனர்.


பாடி, பூகானஅள்ளி, செக்கோடி ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள், இலவச வீட்டுமனை பட்டா, மகளிர் உரிமைத்தொகை, முதியோர் ஓய்வூதியம், குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு நலத் தேவைகள் குறித்து துறை அதிகாரிகளிடம் மனுக்களை அளித்தனர். ஊராட்சி செயலாளர்கள் சாம்ராஜ், பச்சியப்பன், சிவன், கிராம நிர்வாக அலுவலர்கள் ரவி, ஜீவா மற்றும் அரசு துறை அதிகாரிகள் உட்பட பலர் முகாமில் பங்கேற்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies