Type Here to Get Search Results !

வெங்கடசமுத்திரம் பஞ்சாயத்து கிராமசபை கூட்டம் – விதிமுறை மீறல்கள் குறித்த பொதுமக்கள் குற்றச்சாட்டு.


தருமபுரி, ஆகஸ்ட் 15, 2025 (ஆடி 30) – 


பாப்பிரெட்டிபட்டி தாலுகா, வெங்கடசமுத்திரம் பஞ்சாயத்தில் இன்று நடைபெற்ற கிராமசபை கூட்டம், அரசு விதிமுறைகளின்படி நடைபெறவில்லை என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டினர். பொதுமக்களுக்கு முன்கூட்டியே கூட்டம் பற்றிய அறிவிப்பு கொடுக்கவில்லை. மேலும், தீர்மானப் புத்தகத்தில் தீர்மானங்கள் குறித்து எதுவும் எழுதாமல், பொதுமக்களிடம் கையொப்பம் பெறப்பட்டதாகவும், ஒரே நபர் 10-க்கும் மேற்பட்ட போலியான கையொப்பங்கள் பதிவுசெய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.


இந்த கூட்டத்தில் RDO அவர்கள் பங்கேற்றிருந்தாலும், தீர்மானப் புத்தகத்தை ஆய்வு செய்யவில்லை என்பது சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தில் பொதுமக்கள் கொண்டுவந்த மனுக்கள் மட்டும் பெறப்பட்டன. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies