தருமபுரி, ஆகஸ்ட் 15, 2025 (ஆடி 30) –
“இரத்ததானம் நமக்கு சில நிமிடங்கள், அது இன்னொருவருக்கு வாழ்நாள்” என்ற மனப்பாங்குடன், மை தருமபுரி நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா அவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து இரத்ததானம் மற்றும் தட்டணுக்கள் தானம் செய்து வருகிறார்.
2005 மார்ச் 8 மகளிர் தினத்தன்று, படித்திருந்த ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில், கணிதத் துறை தலைவர் ராமசாமி அவர்களின் ஊக்கத்துடன், தனது முதல் இரத்ததானத்தை வழங்கினார். அதன் பின்னர் தொடர்ச்சியாக 46 முறை இரத்ததானமும், 64 முறை தட்டணுக்கள் தானமும் வழங்கி, மொத்தம் 110 முறை உயிர்காக்கும் தானத்தில் பங்கேற்றுள்ளார்.
அவரது நீண்டகால இரத்ததானப் பணியை பாராட்டும் விதமாக, 79வது சுதந்திர தின விழாவில், தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
.gif)

.jpg)