தருமபுரி, ஆகஸ்ட் 14, 2025 (ஆடி 29) –
79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சாமாண்டஹள்ளி கிராமத்தில், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பாரம்பரிய பாடல்களுக்கு நடனம் ஆடிய மாணவர்கள் பரிசுகள், பேனா, பென்சில், நோட்டுப் புத்தகம் மற்றும் மஞ்சபைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும், சாலை பாதுகாப்பு, பிளாஸ்டிக் தடுப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற தலைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தலைமையாசிரியர் திருமதி பெ. சாரதா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உதவி ஆசிரியர்கள் ர. கோவிந்தராஜ், சா. சிவாஜி, சி. உஷாராணி, சு. சரண்யா, மு. பூமதி, நூலகர் திரு. சண்முகம், வெங்கடேசன், சம்பத், துப்புரவு பணியாளர் திரு. குமரன், பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகத் தலைவர் நா. சின்னமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இறுதியில் மாணவர்கள் “பூமி வெப்பத்தை தடுக்க மரங்களை நட்டிடுவோம்”, “சாலை விதிகளை மதிப்போம்”, “பிளாஸ்டிக் பைகளை ஒழித்து மீண்டும் மஞ்சபையை பயன்படுத்துவோம்” என்ற உறுதிமொழி எடுத்தனர். அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் தெரிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டன.
.gif)

.jpg)