தருமபுரி, ஆகஸ்ட் 01 | ஆடி 15 -
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியத்தின் எலுமிச்சனஅள்ளி கிராமத்தில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாம் திமுக மேற்கு ஒன்றிய தலைவர் எம்.வீ.டி. கோபால் தலைமையில் நடத்தப்பட்டது. முகாமின் தொடக்க விழாவில் தாசில்தார் சுகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சர்வோத்தமன் மற்றும் தனலட்சுமி, சட்டமன்ற தொகுதி பார்வையாளர் அரியப்பன், மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் ஏ.வி.குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், மத்திய ஒன்றிய செயலாளர் கண்ணபெருமாள், ஜெ.எம்.எஸ். சக்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தனர்.
இம்முகாமில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான இலவச வீட்டுமனை பட்டா, மகளிர் உரிமைத் தொகை, முதியோர் ஓய்வூதியம், குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கான கோரிக்கைகளை துறை அதிகாரிகளிடம் மனுவாக அளித்தனர். மேலும், முன்னாள் மாவட்ட அவைத் தலைவர் தனகோட்டி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கண்ணப்பன், முத்துமாணிக்கம், முக்கிய நிர்வாகிகள் மாதேசன், அரசு வழக்கறிஞர் நஞ்சுண்டன், ராமன், முனிராஜ், போத்தராஜ், கோவிந்தன், கிருஷ்ணன், மூர்த்தி, சங்கர் மற்றும் பல அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.