Type Here to Get Search Results !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பாப்பிரெட்டிப்பட்டியில் மாபெரும் இரத்ததான முகாம்.


தருமபுரி, ஆகஸ்ட் 17, 2025 (ஆவணி 01) –


79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) அமைப்பு சார்பில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் திரு. ஜஹாங்கீர் பாஷா தலைமையில் நடந்த இந்த முகாமில், மாவட்ட துணைத் தலைவர் திரு. பாபு, கிளை நிர்வாகிகள் திரு. சையத் சாதிக், திரு. நாசீர் மற்றும் திரு. நாசர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக அரசு மருத்துவர் டாக்டர் ஹரிபாஸ்கரன் (தருமபுரி) மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி குருதி பிரிவு அரசு மருத்துவர் டாக்டர் அருண் கலந்து கொண்டு முகாமைத் தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் “முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள்” என்ற நான்கு மாத தொடர் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, மதுபோதை மற்றும் புகையிலை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனுடன், இரத்ததானத்தின் சமூக நன்மைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக இவ்வமைப்பு தொடர்ந்து இரத்ததான முகாம்களை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முகாமில், நிர்வாகிகள், பொதுமக்கள், இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் உள்பட பலர் பங்கேற்று இரத்ததானம் செய்தனர். மொத்தம் 86 யூனிட் (அலகுகள்) இரத்தம் சேகரிக்கப்பட்டது. இரத்ததானம் செய்த அனைவருக்கும் குருதிக் கொடையாளர் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies