Type Here to Get Search Results !

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் செல்லம்மாள் உருவப்படத்திற்கு அஞ்சலி.


தருமபுரி, ஆகஸ்ட் 17, 2025 (ஆவணி 1) –


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரான எழுச்சித் தமிழர் முனைவர் தொல். திருமாவளவன் அவர்களின் சிற்றன்னை செல்லம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.


இதைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் லட்சுமணன் தலைமையில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. பென்னாகரம் பேருந்து நிலையத்தில் செல்லம்மாள் அவர்களின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு, அதற்கு மாலை அணிவித்து, மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.


இந்த நிகழ்வில் ஆட்டோ நாகராஜ் தலைமையிலும், பிரகாஷ், அருள், கே.சி. சரவணன், கிருஷ்ணன், சூரி என்கிற முருகேசன், கார்த்திக், முகாம் செயலாளர் ரமேஷ், கிருஷ்ணாபுரம் முகாம் செயலாளர் மதன்குமார், தமிழழகன், அதிரா, தங்கமணி, இலங்கேசன், உதயகுமார், அதியமான், சின்னு என்கிற ராதாகிருஷ்ணன், வடிவேல், மாதையன், குரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் மாநில, மாவட்ட, ஒன்றிய மட்டத்திலான நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்று மரியாதை செலுத்தினர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies