தருமபுரி, ஆகஸ்ட் 17, 2025 (ஆவணி 01) –
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் ஆக்கிரமிப்பு செய்வதால் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். பேருந்து நிலையத்துக்குள் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பேருந்துகளுக்கு நிறுத்த இடம் இல்லாமல், ஓட்டுநர்கள் சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர். இதனால் பயணிகள், குறிப்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்லும் பொதுமக்கள், காலை நேரங்களில் பேருந்து ஏற முடியாமல் தவிக்கின்றனர்.
பேரூராட்சி ஊழியர்கள் தொடர்ந்து எச்சரித்தாலும், இருசக்கர வாகன ஓட்டிகள் பேச்சைக் கேட்காமல் நிலையத்துக்குள் வாகனங்களை நிறுத்தி வருவது நிலைமைக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பேருந்து ஏறும், இறங்கும் போது விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்து வருகிறது என்று பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த நிலையை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கடத்தூர் பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் கடத்தூர் காவல் நிலையத்தினரிடம் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.gif)

.jpg)