பாப்பிரெட்டிப்பட்டி, ஆக 5 | ஆடி 20 -
பாப்பிரெட்டிப்பட்டி உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மோளையானூர் மற்றும் தேவராஜபாளையம் பகுதிகளுக்கு ஆட்டோவில் பயணித்த போது ஏற்பட்ட சாலை விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மாணவர்கள் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை அறிந்த தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் முனைவர் பி. பழனியப்பன் உடனடியாக மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவர்களின் நிலை குறித்து மருத்துவர்களிடம் விரிவாக விசாரித்தார். அதில் மிகுந்த காயம் அடைந்த மூன்று மாணவர்கள், உயர் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டனர். இந்த நிகழ்வின்போது, திமுக நிர்வாகிகள் இராசு. தமிழ்செல்வன் மற்றும் கு. கௌதமன் ஆகியோரும் உடனிருந்தனர்.