அரூர், ஆக. 5 | ஆடி 20 -
மேலும், கிராம நிர்வாக உதவியாளர் மற்றும் குடிநீர் விநியோக ஆபரேட்டர் சுந்தரம் ஆகியோரிடம் தொடர்ந்து தொலைபேசியில் புகாரும் மனுவும் அளித்தும், அவர்கள் தக்க பதில் கூறாமல், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது பொதுமக்களை மேலும் சோகமுறச் செய்துள்ளது. மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், வீட்டுக்கு வீடு குழாய் இணைப்பு வழங்கப்பட்டதாக கூறப்பட்டாலும், அவை சரிவர அமைக்கப்படாமல் பல இடங்களில் குழாய் இணைப்புகள் முற்றிலும் செயலிழந்துள்ளன. குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் அருகிலுள்ள பாடி, செக்கோடி போன்ற கிராமங்களுக்கு சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் தண்ணீர் எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன், அரசால் அமைக்கப்பட்ட இரண்டு மினி டேங்க்கள் கூட தற்போது பயன்பாட்டில் இல்லாமல், அவற்றிலும் தண்ணீர் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் கூறுகையில்:
"குடிநீர் என்பது ஒரு அடிப்படை மனித உரிமை. நாங்கள் தொடர்ந்து புகார் அளித்தும், ஊராட்சி தலைவர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டவர்களிடம் கோரிக்கையிட்டு வந்தும், நாங்கள் எதிர்பார்த்த எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நாங்கள் அனுபவிக்கும் துயரத்தை அரசும் அதிகாரிகளும் உணர வேண்டும்," என வலியுறுத்தியுள்ளனர்.
குடிநீர் பற்றாக்குறை காரணமாக வாழ்வாதாரமே சீர்குலைந்துள்ள இந்தக் கிராம மக்களின் கோரிக்கையை அரசு உடனடியாக கவனித்து மீள்பார்வை எடுத்து நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.