Type Here to Get Search Results !

பாலக்கோடில் ஜெயலலிதா பிறந்தநாள்: 1500 பேருக்கு அன்னதானம் வழங்கிய கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ.


தருமபுரி - மார்ச் 14:


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு 1500 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி கவுன்சிலரும், அம்மா பேரவை நகர செயலாளருமான விமலன் தலைமையேற்றார். மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வெற்றிவேல், மாவட்ட அவைத்தலைவர் தொ.மு. நாகராஜன், முன்னாள் ஒன்றிய செயலாளர் கே.வி. அரங்கநாதன், ஒன்றிய செயலாளர்கள் கோபால், வழக்கறிஞர் செந்தில், நகர செயலாளர் ராஜா, எம்.பி. சண்முகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.


நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மற்றும் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி. அன்பழகன் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கட்சி தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் 1500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அசைவ உணவுடன் அன்னதானம் வழங்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் பாலன், கண்ணையன், வீரமணி, ரவி, நாகன், முத்துஜா, முத்துவேல், கொளந்தை, ராஜா, சண்முகம், ஞானம், உதயகுமார், கோவிந்தசாமி, சுப்பிரமணி, முருகன், வீரபத்திரன், நஞ்சுண்டன், சரவணன், மாதேஷ், பச்சியப்பன், சிவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies