பாப்பிரெட்டிப்பட்டி, ஆக. 28 (ஆவணி 12) -
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பையர்நத்தம் பகுதியில் கடந்த 27-08-2025 அன்று மது போதையில் ஏற்பட்ட அடிதடியின் காரணமாக, சமூக மோதல் ஏற்படும் வாய்ப்பைத் தடுக்கும் வகையில் காவல்துறையினர் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வரும் பாதுகாப்பு நடவடிக்கையில், பெண் போலீசார் 15 பேர் மற்றும் ஆண் போலீசார் 20 பேர் என மொத்தம் 35 போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க போலீசார் இரவு பகலாக முகாமிட்டு கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பையர்நத்தம் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் வழக்கம் போல் செயல்பட்டன. பொதுமக்களும் தங்களின் அன்றாட பணிகளை இயல்பாக மேற்கொண்டு வருவதால், கிராமம் முழுவதும் அமைதியான சூழல் நிலவி வருகிறது.

