தருமபுரி, ஆக. 28 | ஆவணி 12 -
தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற முதல்வர் கோப்பை சதுரங்கப் போட்டி பள்ளி ஆண்கள் பிரிவில் 7 சுற்றுகளாக நடைபெற்றது. இதில் 6.5 புள்ளிகள் பெற்று தர்மேஷ் முகுல் முதலிடத்தைப் பெற்றார். இரண்டாம் இடத்தை தேவேஷ் முகுல் மற்றும் மூன்றாம் இடத்தை திருப்புகழ் பெற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் டி. சாந்தி மற்றும் தருமபுரி மாவட்ட சதுரங்க கழகச் செயலாளர், மேலும் இப்போட்டியின் முதன்மை நடுவரான பி. ராஜசேகரன் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
இந்தப் போட்டியின் மூலம் முதலிடத்தில் வெற்றி பெற்ற தர்மேஷ் முகுல் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.

