தருமபுரி, ஆகஸ்ட் 20 (ஆவணி 4):
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி வட்டம், இருளப்பட்டி பகுதியில் உள்ள அருள்மிகு காணியம்மன் கோவிலின் தேர் திருவிழா இன்று சீரும் சிறப்புமாக நடைபெற்றது. திருவிழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில் 510 லிட்டர் பாலை கொண்டு தயிர் தயாரித்து, சுமார் பத்தாயிரம் பக்தர்களுக்கு நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு மாநில செயற்குழு உறுப்பினர் திரு. சந்திரசேகர் தலைமையிலானார். மாவட்ட தலைவர் திரு. வடிவேல் குருசாமி, மாவட்ட செயலாளர் திரு. சபரிராஜன், மாவட்ட பொருளாளர் திரு. ஐயப்பன், மாவட்ட துணைத் தலைவர் திரு. சங்கர் குருசாமி, மாவட்ட துணைச் செயலாளர் திரு. வித்யாசாகர், மாவட்ட தொண்டர் படை தளபதி திரு. பிரகாஷ், தருமபுரி நகர சங்க நிர்வாகிகள் திரு. சதீஷ்குமார் ராஜா, திரு. செந்தில்குமார், பென்னாகரம் நகர தொண்டர் படை தளபதி திரு. சதீஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும், பாப்பிரெட்டிபட்டி வட்டத்திற்குட்பட்ட 11 கிளை சங்கங்களின் நிர்வாகிகள், குரு சுவாமிகள், அகில பாரத ஐயப்ப சேவா சங்க உறுப்பினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு ஆன்மிக உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.வ கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இந்த சேவையை முன்னெடுத்து சிறப்பாகச் செய்தமைக்காக, பாப்பிரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த அகில பாரத ஐயப்ப சேவா சங்க முன்னோடிகளுக்கு தருமபுரி மாவட்டக் குழுவின் சார்பில் "ஆன்மீக சேவையாளர் விருது" மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், இயற்கை ஆர்வலர் திரு. முத்துக்குமார் அவர்கள் வழங்கிய பழமரக்கன்றுகளும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.