பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்காக தமிழகம் முழுவதும் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக, தருமபுரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள முகாம்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் சதீஷ்குமார் அறிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் முகாம்களில் நகரப் பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளன.
வட்டம் / நகரம் | இடம் / வளாகம் | ஏற்பாடு / தலைமையகம் | தேதி |
---|---|---|---|
தருமபுரி நகராட்சி | செங்குந்தர் திருமண மண்டபம், பென்னாகரம் மெயின் ரோடு | தருமபுரி நகராட்சி ஆணையர் திரு. சேகர் |
21.08.2025 |
பாப்பிரெட்டிபட்டி | கடத்தூர் ஊராட்சி மன்றம் – மீனாட்சி மஹால், கடத்தூர் | ஊராட்சி ஒன்றியத் தலைவர் திரு. எம். விஜயசங்கர் |
21.08.2025 |
பென்னாகரம் | பிக்கிலி நான்கு சாலை சந்திப்பு – திறந்த வெளி | வட்டார வளர்ச்சி அதிகாரி திரு. ஜி. லோகநாதன் |
21.08.2025 |
நல்லம்பள்ளி | அவ்வை நகர் சமூக கூடம் | வட்டார வளர்ச்சி அதிகாரி திரு. நீலமேகம் |
21.08.2025 |
பாலக்கோடு | கமலாபட்டி VPRC கட்டிடம் | வட்டார வளர்ச்சி அதிகாரி திருமதி. ரேணுகா |
21.08.2025 |
அரூர் | இட்லாபட்டி (மாம்பட்டி) அண்ணாமர் திருமண மண்டபம் | வட்டார வளர்ச்சி அதிகாரி திருமதி. கலைச்செல்வி |
21.08.2025 |
வார்டு வாரியாக நடைபெறும் இந்த முகாம்கள் குறித்து அலுவலர்கள் வழியாக மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதேபோல், தி.மு.க. உள்ளாட்சி பிரதிநிதிகளும் தங்கள் பகுதிகளில் நடைபெறும் முகாம்கள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தி வருகின்றனர்.
இந்த முகாம்களின் மூலம் பொதுமக்களின் குறைகள் உடனடியாக தீர்க்கப்பட்டு, பல்வேறு அரசுத் திட்ட நன்மைகள் மக்களிடம் நேரடியாக சென்றடையும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.