பாப்பிரெட்டிப்பட்டி – ஆகஸ்ட் 27, 2025 (ஆவணி 11)-
பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1977–1978 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்று, அந்த ஆண்டில் பள்ளியின் முதல் மதிப்பெண் பெற்ற முன்னாள் மாணவரான வேங்கனார் வஞ்சரம் பள்ளியின் தாளாளர் K. ராஜேந்திரன் அவர்கள், தமது தாயகப் பள்ளியை சந்தித்து, மேடை அமைத்து தருமாறு பள்ளி நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
அந்த கோரிக்கையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட அவர், மேடையை பள்ளிக்கு அமைத்து தருவதாக உறுதி அளித்தார். இந்நிகழ்வை ஏற்பாடு செய்து வழங்கியதற்காக SMC கல்வியாளர் மற்றும் உறுப்பினர் தொப்பையின் ஐயாவிற்கு பள்ளி சார்பாகவும், பள்ளி மேலாண்மை குழு சார்பாகவும் நன்றி மற்றும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.