தருமபுரி – ஆக 27 (ஆவணி 11) -
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பையர்நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட பொந்திகலில் உள்ள ஸ்ரீ நாரை கிணற்று மாரியம்மன் திருக்கோவில் கட்டபூமி பூஜை மற்றும் பால் கொம்பு நடுதல் நிகழ்வு பக்தி சிறப்புடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு பூஜையில் பங்கேற்று, பக்தியுடன் கட்டிட திருப்பணிகள் தொடங்கப்பட்டன.
கோவில் திருப்பணிக்கான நிதியாக பலர் நன்கொடைகள் வழங்கினர். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் இரா. மாதவன் (த/பெ. இராமு) ரூ.50,000 நன்கொடையாக அளித்தார். அதேபோல், ராஜராஜ சோழன் தந்தை பெயர் ராஜாராம் ரூ.5,000, தென்னரசு தந்தை பெயர் கோவிந்தன் ரூ.5,000, இரா. மாதவன் தந்தை பெயர் B.K. இராமு ரூ.5,000 என பலர் தங்களால் இயன்ற அளவு நன்கொடைகளை வழங்கினர். இதன் மூலம், பக்தர்கள் அனைவரின் பங்களிப்புடன் கோவில் திருப்பணிகள் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.