தருமபுரி – ஆகஸ்ட் 27, 2025 (ஆவணி 11) -
பள்ளப்பட்டி அருகே உள்ள மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தில், மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா மிகுந்த பக்தி உணர்வுடன் நடைபெற்றது.
விழாவையொட்டி விநாயகருக்கு சிறப்பு யாகம், அபிஷேக பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் கல்விக் குழுமத் தாளாளர் டாக்டர் கோவிந்த், செயலாளர் காயத்ரி கோவிந்த், நிர்வாக இயக்குநர், கல்லூரி முதல்வர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர். அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.