பாப்பிரெட்டிப்பட்டி, ஆக 06 | ஆடி 21 -
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய திமுக ஒருங்கிணைப்பு குழு, BDA மற்றும் BLA2 நிர்வாகிகள் பங்கேற்ற உறுப்பினர் சேர்க்கை ஆய்வுக் கூட்டம் இன்று (06.08.2025) காலை 11 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்தில், தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் முனைவர் P. பழனியப்பன் அவர்கள் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில், உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை வழங்கிய அவர், திமுக தலைவர் அவர்கள் வழங்கிய வழிகாட்டலின் படி, 40% உறுப்பினர் சேர்க்கை இலக்கை வீடு வீடாக சென்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி விரைவாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார். இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகளை பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் சந்தோஷ்குமார் மேற்கொண்டார். கூட்டத்தில் அரூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் கு. தமிழழகன், தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் அன்பழகன், சுரேஷ் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், BDA, BLA2 நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.