பாலக்கோடு, ஆகஸ்ட் 6, 2025 | ஆடி 21 –
சுமார் 5 ஏக்கர் பரப்பளவிலான வளாகத்தில், தேக்கு, செம்மரம், சந்தனம் உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்புக்காக 24 மணி நேர கண்காணிப்பு மற்றும் காவலாளர்கள் இருந்தபோதிலும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன், இரவு நேரத்தில் சில சமூக விரோதிகள் கல்லூரி வளாகத்தில் புகுந்து, நூலகத்தின் அருகே உள்ள இரண்டு பழமையான சந்தன மரங்களை எலக்ட்ரிக் ரம்பம் மூலம் வெட்டி, சந்தன கட்டைகளை எடுத்துச் சென்றுள்ளனர்.
சந்தன மரத்தின் கழிவுகள் அந்த இடத்திலேயே விட்டுவிடப்பட்டுள்ளன, இது திட்டமிட்ட திருட்டு சம்பவமாக இருக்கலாம் என்பதற்கான சாட்சியாக பார்க்கப்படுகிறது.
நிர்வாக அலட்சியம்?
சம்பவம் நடந்த மூன்று நாட்களாகியும் கல்லூரி நிர்வாகம் காவல் துறையோ, வனத்துறையோ எந்தவொரு புகாரையும் அளிக்கவில்லை என்பது பொதுமக்களில் சந்தேகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால், மரங்கள் தொடர்ந்து கடத்தப்படும் அபாயம் ஏற்படக்கூடும் என்ற கவலையும் நிலவுகிறது.
பொதுமக்கள் கோரிக்கை:
கல்லூரி நிர்வாகத்தின் புறக்கணிப்பை கண்டித்த பொதுமக்கள், மாவட்ட நிர்வாகம் நேரில் விசாரணை மேற்கொண்டு, சந்தன மரங்களை கடத்தியவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.