காரிமங்கலம், ஜூலை 10 (ஆனி 26) -
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள சின்னமாட்லாம்பட்டி கிராமத்தில் சுமார் 210 குடும்பங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்ப பகுதியில் உள்ள ஏரியானது இக்கிராம மக்களின் விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் பொதுமக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வந்தது. இப்பகுதியில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் மற்றும் கடைகள் கட்டியதால், மழை காலங்களில் ஏரிக்கு வர வேண்டிய மழை நீர் வராமல் ஏரி வறண்டு தண்ணீர் இன்றி காய்ந்து போனது, இதனால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து விவசாயம் பாதிக்கப்படுவதுடன் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படுள்ளது.
இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை மனு அளித்தும் யாரும் கண்டுகொள்ளாத நிலையில் 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரளாக சென்று காரிமங்கலம் தாசில்தாரிடம் உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மனு அளித்தனர். மனுவை பெற்று கொண்ட தாசில் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.