தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடி அருகே உள்ள சிக்கம்பட்டி கிராமத்தில், மலைவாழ் பழங்குடியின குருமன்ஸ் மக்களின் குலதெய்வமான ஸ்ரீ வீரபத்திரர் சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
காலை வேத கோஷங்களுடன் கோபுர கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை, தசதான தரிசனம், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் சிறப்பாக நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியின் அருளைப் பெற்றனர்.
மகா கும்பாபிஷேக தீர்த்தம் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது. இதனை "கோடி புண்ணியம்" என்று கருதி பக்தர்கள் ஆனந்தமாக பெற்றனர். பிறகு அன்னதானம் வழங்கப்பட்டு பக்தர்கள் அனைவரும் பசித்தீர் ஆனார்கள்.
கோவில் நிர்வாகத்தின் தகவலின்படி, வரும் வியாழக்கிழமை பூஜை நிறைவு அடையும். அன்று பால்குடம் எடுத்தல், சக்தி அழைத்தல் மற்றும் மண்டல பூஜைகள் நடைபெற உள்ளன. அனைத்து பக்தர்களும் பால்குடம் எடுத்து பங்கேற்று விழாவை சிறப்பிக்குமாறு நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
- பொம்மிடி செய்தியாளர் வெங்கடேசன்.