அரூர் ஜூலை 10 (ஆனி 26) -
தருமபுரி மாவட்டம் – அரூர் சரக அளவிலான பள்ளி இடையிலான கேரம் போட்டி கீரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் விமரிசையாக நடைபெற்றது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 11ஆம் வகுப்பு மாணவரான விக்ரம் பிரபு, சூப்பர் சீனியர் ஒற்றையர் பிரிவில் முதல் இடத்தை பிடித்து கணிசமான சாதனைப் படைத்துள்ளார்.
வெற்றி பெற்ற மாணவனைப் பாராட்டி, உடற்கல்வி ஆசிரியர் பழனிதுரை, முருகேசன், வெங்கடாசலம் ஆகிய பயிற்சியாளர்களுக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆறுமுகம், உதவி தலைமை ஆசிரியர்கள் பாவாசா, சக்திவேல், கதிரேசன், மணிமாறன், மூர்த்தி, கமலநாதன் மற்றும் மக்கள் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டுகளை தெரிவித்தனர்.