தருமபுரி, செப்டம்பர் 05 (ஆவணி 20):
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பையர்நத்தம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் திரு. வெ. வெங்கடாசலம் அவர்களுக்கு, 2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு வழங்கும் டாக்டர். எஸ். இராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற ஆசிரியர் தின மாநில விழாவில், தமிழ்நாடு துணை முதல்வரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும் இணைந்து இந்த விருதை வழங்கினர். மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும், பள்ளியின் வளர்ச்சிக்கும் செய்த பணி மற்றும் அர்ப்பணிப்பை பாராட்டி இந்த கௌரவம் வழங்கப்பட்டது.
- பொம்மிடி செய்தியாளர் வெங்கடேசன்.