Type Here to Get Search Results !

ஒகேனக்கல்லில் தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில பேரவை சிறப்பு கூட்டம் நடைபெற்றது.


ஓகேனக்கல், செப்டம்பர் 2:

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் விடுதலை முன்னணி (LLF) சார்பில் மாநில பேரவை சிறப்பு கூட்டமும் தருமபுரி மண்டல செயற்குழு கூட்டமும் நடைபெற்றது.


இந்தக் கூட்டம், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் மற்றும் தொழிலாளர் விடுதலை முன்னணி மாநிலத் தலைவர் முனைவர் தொல். திருமாவளவன் அவர்களின் அறிவுரையின்படி, சங்கத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வருகை தந்த தொழிலாளர்களை மத்திய தொழிற்சங்க பொதுச் செயலாளர் வீரமகேந்திரன் (மயில்) வரவேற்றார்.


முக்கிய கோரிக்கைகள்:

கூட்டத்தில், மாநிலம் முழுவதும் பணிபுரியும் போக்குவரத்து ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை:

  • போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்.

  • ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு அன்றே பணபலன்கள் வழங்கப்பட வேண்டும்.

  • 15-வது ஊதிய ஒப்பந்தத்தின் படி நிலுவைத் தொகை வழங்கப்பட வேண்டும்.


இக்கூட்டத்தில், தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணைச் செயலாளர் சென்னகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் பேரவை பொதுச் செயலாளர் அண்ணாதுரை, தலைமைச் செயலாளர் கௌதமன், பொருளாளர் பிரகாசம் ஆகியோர் உட்பட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.


இக்கூட்டத்தில் கவியரசு, சேகர், தமிழன், மாயக்கண்ணன், கோபால், ஆறுமுகம், மணிநாதன், தவமணி, கருணாநிதி, ராஜேந்திரன், பாலகிருஷ்ணன், சின்னமாது, குமரவேல், கமலேசன், வீரமணி, ஏழுமலை, கண்ணன், லட்சுமிபதி, குமார், சதீஷ்குமார், ஹக்கீம், அண்ணாமலை, கதிரேசன், தர்மர், சந்திரபாபு, சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி நிறைவில் சங்கர் நன்றியுரை வழங்கினார். 



- தகடூர்குரல் செய்திகளுக்காக செய்தியாளர் இர்பான்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies