பாப்பிரெட்டிப்பட்டி, ஜூலை 2 (ஆனி 18):
அதனைத் தொடர்ந்து, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் புதிய சமையலறை அமைக்கப்பட்டு, உள்நோயாளிகளுக்கான மூன்று வேளை உணவு வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி. சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.
இதுவரை காலை மற்றும் இரவில் பால், ரொட்டி போன்றவற்றே வழங்கப்பட்ட நிலையில், இப்போது நோயாளிகளுக்கு முழுமையான காலை, மதியம் மற்றும் இரவு உணவுகள் வழங்கப்படுகின்றன. இதற்காக சமையலறை புதுப்பிக்கப்பட்டு, உபகரணங்கள் மற்றும் தேவையான மளிகைப் பொருட்கள் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்திற்கான அரிசி உணவுத் துறையிடமிருந்து பெற மாவட்ட ஆட்சித்தலைவர் நேரடியாக அனுமதி வழங்கியுள்ளார். தினசரி சுமார் 100-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் இந்த திட்டத்தின் பயனாளிகளாக உள்ளனர்.