Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே சிறுத்தையின் தொடர்ச்சி வேட்டையில் அச்சம்; சிறுத்தையை கண்காணிக்க சிறப்பு குழு அமைப்பு.


பாலக்கோடு, ஆடவை (ஆனி) 14-

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே வாழைத்தோட்டம் பகுதியில் ஒரே வீட்டில் மீண்டும் மீண்டும் வேட்டையாடும் சிறுத்தை நடமாட்டம், பொதுமக்களில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று வீட்டு முற்றத்தில் அமர்ந்திருந்த சேவலை பதுங்கி சென்று கவ்விச் செல்லும் சிறுத்தையின் காட்சி சிசிடிவியில் பதிவு செய்யப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதற்குப் பிறகு, சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் விரைந்து சென்றனர். சிறுத்தை நடமாட்டம் அதிகமாக உள்ளதால், தற்போது வனத்துறையின் சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிறுத்தையின் தாக்குதலால் வீட்டில் ஏற்கனவே ஒரு நாய், கோழி உள்ளிட்டவை இரையாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் குடியிருப்புகள் அதிகமாக பாதிக்கப்படுவதாகவும், விரைந்து சிறுத்தையை பிடித்து வனப்பகுதிக்கு மாற்ற வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies