பாப்பிரெட்டிப்பட்டி, ஜூலை 2 (ஆனி 17):
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் இன்று நடைபெற்ற சிறப்புச் செயல்பாட்டின்போது, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அடையாள அட்டைகளை நேரில் வழங்கி, தேர்தல் பணியின் முக்கியத்துவத்தைக் கூறி ஊக்கமளித்தார்.
இந்த நிகழ்வில், மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் மரு. மரிய சுந்தர், இணை இயக்குநர் (மருத்துவம்) மரு. சாந்தி, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் மரு. அருண், அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.