![]() |
Image Source : google.com |
காரிமங்கலம், ஜூலை 16-
காரிமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்து காரிமங்கலம் மின்வாரிய உதவி கோட்ட பொறியாளர் அருண் பிரசாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் துணை மின் நிலையத்தில் - பராமரிப்பு பணிகள் மேற் கொள்வதால் நாளை (17ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காரிமங்கலம், கெரகோட அள்ளி, பெரியாம்பட்டி, கோவிலூர், திண்டல், பந்தாரஅள்ளி, பேகார்அள்ளி, கொட்டுமாரண அள்ளி, அண்ணாமலை அள்ளி, அனுமந்தபுரம், எலுமிச்சன் அள்ளில், சின்னமிட்டஅள்ளி, மோட்டூர், பெரிய பூலாப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் நாளை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.