Type Here to Get Search Results !

புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காக கூந்தல் தானம் வழங்கிய ஒன்பதாம் வகுப்பு மாணவி.


தருமபுரி, மே.07:


மை தருமபுரி அமைப்பின் சார்பில் பல்வேறு மனிதநேய சேவைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, புற்றுநோய் பாதித்த குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்காக இரத்த தானம், தட்டணுக்கள் தானம் உள்ளிட்ட உதவிகள் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகின்றன. புற்றுநோய் சிகிச்சை காரணமாக குழந்தைகளுக்கு முடி உதிர்வு அதிகமாக ஏற்படுவதால், அவர்களுக்கான செயற்கை தலைமுடி தயாரிக்க கூந்தல் தானம் வழங்கும் விழிப்புணர்வையும் மை தருமபுரி அமைப்பினர் தருமபுரி மாவட்டத்தில் ஏற்படுத்தி வருகின்றனர்.


இதன் ஒரு பகுதியாக, தருமபுரி பழைய கோட்டர்ஸ் பகுதியை சேர்ந்த எஸ்.கே. பிரிண்டர்ஸ் உரிமையாளர் சம்பத் குமார் – கோமலா தம்பதியினரின் மகள் சஹானா, கேந்திரியா வித்யாலயாவில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காக தனது கூந்தலை தானமாக வழங்கி மனிதநேய செயலில் ஈடுபட்டார்.


மாணவி சஹானாவின் இந்த செயலை மை தருமபுரி அமைப்பினர் பாராட்டியதுடன், அவரது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர். மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் முனைவர் சதீஸ் குமார் ராஜா, மாணவியிடமிருந்து கூந்தல் தானத்தை பெற்றுக்கொண்டார்.



© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies