தருமபுரி, மே.08:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 தொடர்பான அனைத்து தேர்தல் நடவடிக்கைகளும் நிறைவடைந்து, இந்திய தேர்தல் ஆணையத்தால் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், தருமபுரி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் மீண்டும் நடத்தப்பட உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் 11.05.2026 முதல் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியரக அதியன் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகள் தொடர்பான மனுக்களை நேரடியாக அளித்து பயன்பெறலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)