முக்கிய நாளான நேற்று அதிகாலை கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்ச சூக்த ஹோமம், துர்கா சகஸ்ரநாம பாராயணம், மகா சாந்தி ஹோமம், நான்கு கால வேள்வி, ரக்ஷாபந்தன், நாடிசந்தனம், பூர்ணாஹுதி போன்ற வைதிகச் சடங்குகள் நடந்தன. பின்னர் யாகசாலையில் இருந்து புனித தீர்த்த கலசம் எடுத்துச் செல்லப்பட்டு, கோயில் உச்சியில் அமைந்துள்ள கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. பின்னர் அந்த தீர்த்த நீர் பக்தர்கள்மீது தெளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அம்மனுக்கு அபிஷேகங்களும், புஷ்ப அலங்காரமும் செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த அம்மனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் திரண்டனர். விழாவை ஒட்டி பக்தர்களுக்காக அன்னதானமும் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பேளாரஅள்ளி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திரு. மாரியப்பன், கோயில் பங்காளிகள் மற்றும் கிராம பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர்.