பாப்பிரெட்டிப்பட்டி, ஜூலை 29 | ஆடி 13 -
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் வெ. கலைவாணன் அவர்கள் தலைமை தாங்கினார். குழு உறுப்பினர் ராஜாமணி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். உதவி தலைமை ஆசிரியர் திரு. ரகு அவர்கள், மேலாண்மை குழுவின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். மேலாண்மை குழுத் தலைவர் இளவரசன், துணைத்தலைவர் மற்றும் கல்வியாளர் திரு. தங்கராஜ் ஆகியோரும், குழு உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பள்ளியின் சுற்றுச்சுவர் மேம்படுத்தல், சுற்றுப்புற தூய்மைப் பணிகள், பள்ளி சீரமைப்பு பணிகள், விளையாட்டு மைதானத்தில் நடைப்பாதை அமைத்தல் உள்ளிட்ட முக்கியமான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டம் பள்ளி ஆசிரியர் திரு. சிவமணி அவர்கள் நன்றியுரை ஆற்றியதுடன் சிறப்பாக நிறைவுற்றது.