தருமபுரி, ஜூலை 2 (ஆனி 17):
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் அறிவிப்பின் அடிப்படையில், 2025–2026 சட்டப்பேரவை ஆண்டில், திருக்கோயில்கள் மூலம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மணமக்களுக்குத் 4 கிராம் தங்கத்தாலி உட்பட ரூ.70,000 மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று நடைபெற்ற திருமண விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ் அவர்கள், மணமக்களுக்கு பட்டு வேட்டி, பட்டு சேலை, தங்க திருமாங்கல்யம், மாலைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், தலையணை, பீரோ, மெத்தை, மின்மிக்சி, எவர்சில்வர் சமையலறை பொருட்கள் என அனைத்தும் ஒரு இணைக்கு ரூ.70,000 மதிப்பில் வழங்கினார்.
இவ்விழாவில் கோயில் நிர்வாகத்தின் சார்பில் மணமக்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு திருமண சிறப்புணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தருமபுரி நகரமன்ற தலைவர் திருமதி மா. லட்சுமி நாட்டான் மாது, இந்து சமய அறநிலையத்துறை சேலம் துணை ஆணையர் திருமதி விமலா, தருமபுரி உதவி ஆணையர் திரு மு. மகாவிஷ்ணு, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் திரு. அன்பழகன் மற்றும் உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.