காரிமங்கலம், ஜூலை 11 (ஆனி 27) -
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட நாகனம்பட்டி ஊராட்சியில், நாகனம்பட்டி முதல் புலிகரை முக்குளம் வரை தார்சாலை மேம்பாடு பணிக்காக ரூ.3 கோடி மதிப்பில் பூமிபூஜை நடைபெற்றது. இந்நிகழ்வில், பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி. அன்பழகன் அவர்கள் நேரில் கலந்து கொண்டு மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில், அதிமுகவின் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், முன்னாள் சேர்மன் கே.சி. மாணிக்கம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் காவேரி, ஒன்றிய மாணவரணி செயலாளர் ரவிசங்கர், மாவட்ட பிரதிநிதி மற்றும் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல், ஊராட்சி தலைவர் பெரியசாமி, கவுன்சிலர் குமரன், வழக்கறிஞர் பாரதி, சேலம் மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைத் தலைவர் சாந்தகுமார், நகர செயலாளர் கொளதம்குமார், ஒன்றிய துணைத்தலைவர் கார்த்திக், எத்திராஜ், ஆறுமுகம், செல்வராஜ், பாலு, கதிர் உள்ளிட்ட பலர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர். இப்பணிகள் சிறப்பாக நிறைவேறி, பொதுமக்கள் நலனில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.