
Image Source : Google.com
தருமபுரி, ஜூலை 11 (ஆனி 27) -

தருமபுரி மாவட்டத்தில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம், வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த கூட்டம், தருமபுரி மாவட்ட ஆட்சியரின் தலைமையில், காலை 10.30 மணி அளவில் தருமபுரி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் வருவாய் துறையின் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு, தங்களுடைய குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் தெரிவிக்கலாம். இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், தங்களுடைய குறைகளை எழுத்து மூலமாக தயார் செய்து, ஜூலை 28, 2025 தேதிக்குள் மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. என குறித்து மாவட்ட ஆட்சியர் திரு. ச. சதீஷ், இ.ஆ.ப., அவர்கள் அறிவித்துள்ளனர்.