பாப்பிரெட்டிப்பட்டி, ஜூலை 3 (ஆனி 18):
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள நடுப்பட்டி samuthaya கூடத்தில், “ஓரணியில் தமிழ்நாடு” திட்டத்தின் கீழ் திமுக உறுப்பினர் சேர்க்கைக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. தருமபுரி மாவட்ட வடக்கு ஒன்றிய செயலாளர் N.A. மாது தலைமையில் கூட்டம் நடைபெற்றது. திமுக மாவட்ட தகவல் தொழில்நுட்பத் துறை ஒருங்கிணைப்பாளர்கள் M.மேகராஜ் மற்றும் கு.தமிழழகன் முன்னிலையில், OTNAC ஒருங்கிணைப்பாளர் சண்முகம், BDA, BLA2 நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் செயலி மூலம் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, திராவிட மாடல் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைப்பது குறித்த பயிற்சி அளித்தார். நிகழ்வில் மாவட்டத்தலைவர்கள், ஒன்றிய நிர்வாகிகள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கட்சி முன்னோடிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.