தருமபுரி, ஜூலை 4 (20 ஆனி 2055) -
தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் பயன்பாட்டிலிருந்த அரசு வாகனம் ஒன்று கழிவாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான பொது ஏலம் விரைவில் நடைபெற உள்ளது. TN 29 AJ 5584 என்ற எண்ணிலுள்ள Ambassador Grand 1800 (பெட்ரோல்) வகை வாகனம் தற்போது பயன்பாட்டிற்குப் பொருத்தமில்லாததாக இருந்து, அரசு வழிகாட்டல்படி கழிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த வாகனம் 15.07.2025 (01 ஆடி 2056) அன்று பிற்பகல் 4.00 மணிக்கு, தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் பொது ஏலத்திற்கு வைக்கப்படுகிறது.
ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் அன்றைய தினம் நேரில் வந்து தங்களது விலைப்புள்ளிகளை முன்வைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் திட்ட இயக்குநர், இ.ஆ.ப. செல்வி கேத்தரின் சரண்யா அவர்கள் வெளியிட்டுள்ளார்.