தமிழ்நாட்டின் உரிமைகள் மற்றும் மாநில சுயாட்சி பாதுகாப்பதற்காக திமுகவின் “ஓரணியில் தமிழ்நாடு” திட்டத்தின் விளக்க பொதுக்கூட்டம், தருமபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் அரூர் ரவுண்டானாவில் நடைபெற்றது. மாநில அமைச்சர்கள் எ.வ.வேலு, MRK.பன்னீர்செல்வம் மற்றும் டி.ஆர்.பி.ராஜா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, திமுக மாவட்ட செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
நிகழ்வில் அரூர் நகர செயலாளர் முல்லைரவி வரவேற்றார். மாநில மகளிர் அணி துணை செயலாளர் ரேகாபிரியதர்சினி சிறப்புரை நிகழ்த்தினார். முன்னாள் எம்எல்ஏக்கள், மாவட்டத்தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி, மகளிர் அணி, வாக்குசாவடி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.