Type Here to Get Search Results !

அனுமந்தபுரம் பஸ் நிறுத்தம் பின்புறம் கஞ்சா விற்ற கூலி தொழிலாளி கைது.


காரிமங்கலம், ஜூலை 26 | ஆடி 10 -


தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் அவர்களின் கண்காணிப்பில், துணை ஆய்வாளர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அனுமந்தபுரம் பஸ் நிறுத்தம் பின்புறம், கையில் பையை வைத்துக் கொண்டு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த நபர், போலீசாரை கண்டவுடன் தப்பிச் செல்ல முயன்றார். அதனை கவனித்த போலீசார் அவரை விரட்டி சுற்றி வளைத்து பிடித்தனர்.


விசாரணையில் அவர், சொன்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி தேவகிரி (வயது 30) என தெரியவந்தது. மேலும் அவர், பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் உறுதி செய்யப்பட்டது. போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies