Type Here to Get Search Results !

பாலக்கோடில் தனியார் மண்டபத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க DYFI இடைக்கமிட்டி 12வது மாநாடு கூட்டம்.


பாலக்கோடு, ஜூலை 26 | ஆடி 10 - 


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு திருமலைவாசன் மண்டபத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இடைக்கால குழுவின் 12வது மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மோதூர், கார்த்திக், சந்திரசேகர், சத்யராஜ், தேவராஜ், சாமுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டை ஒட்டி நடைபெற்ற எழுச்சிகரமான பேரணியை மாநில துணைச் செயலாளர் பாலாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி, தக்காளி மார்க்கெட், தாசில்தார் அலுவலகம், பஸ் நிலையம் வழியாகச் சென்று மீண்டும் மண்டபத்தில் முடிவடைந்தது.

மாநாட்டின் முக்கிய தீர்மானங்களில், பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ.ஸ்கேன் போன்ற நவீன மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும், பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் வட்டங்களில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும், வீடு அற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், மேலும் தக்காளி மற்றும் மாம்பழத்தை அடிப்படையாகக் கொண்ட கூல் தொழிற்சாலை அமைக்க வேண்டும் ஆகியவை இடம்பெற்றன. இம்மாநாட்டில் மாவட்ட செயலாளர் அருள்குமார், மாவட்ட பொருளாளர் சிலம்பரசன், வட்ட துணைத் தலைவர் தேவிசிரி, வட்ட துணைச் செயலாளர் ரவி, வட்ட பொருளாளர் மீரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies